உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

வள்ளியம்மை சரித்திரம்.


வள்ளியம்மைக்கு மணமகன் தேடுதல்.

அன்னம் பிறந்த அருமரபின் மாண்புக்கும்
மின்னாள் அறிவிற்கும் மேன்மைக்கும் — கன்னி
வனப்புக்கும் ஏற்ற மணமகனிங் குண்டோ
எனப்புகல்வர் மின்னார் எடுத்து. ௪௧

திருந்திழையைத் தம்மருமைத் தேவியாக் கொள்ள
அருந்தவஞ்செய் தோர்புவியில் யாரோ — தெரிந்திலேம்
நங்கையினைத் தம்முடைய நாயகியாக் கொண்டவரே
புங்கவராம் என்பர் புகழ்ந்து. ௫௰

மின்னனையாள் தந்தைசில வேளைக்கு முன்னாகப்
பொன்னுலக முற்றதனாற் பொற்கொடியின் — அன்னைதான்
மாதினைத் தக்க மணமகனுக் கீயநினைத்
தோதினள்சுற் றத்துளுரி யோர்க்கு. ௫௧

கன்னி மணப்பருவம் கண்டதனால் கல்வியொடு
நன்னெறியே பற்றிநிற்கும் நம்மரபின் — மன்னனைய
ஓர்மா மகன்பார்த் துறுநன் மணஞ்செய்தல்
சீர்நல்கும் என்றாள் தெளிந்து. ௫௨

அன்னவைகேட் டாங்கவர்கள் அன்போடுவகையராய்
இன்னவைதான் சொல்வார் இனிதாகத் — தென்னளகை
என்றோர் நகருண்டாம் இப்புவியில் எப்பதிக்கும்
நன்றேயாம் அந்த நகர். ௫௩

அந்நகரைக் காக்குமுல காண்டாள் கிருபையினால்
மன்னுசீர் பெற்றே மகிழ்ந்தினிது — முன்னர்
புவிராசர்க் காத்த சிதம்பரமாம் போதக்
கவிராசன் செய்தவத்தின் கண். ௫௪