பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணச் சிறப்பு.
17
தான்சேர்ந் திருந்தான் தகைசேரும் வாள்விழியாம்
மான்சேர் வதன மதியாளைக்—கான்சேரும்
நன்மஞ் சனமாட்டி நற்றூசால் நாள்மலரால்
பொன்மணிப்பூ ணாலும் புனைந்து. ௯௧

பூமகளோ தானிந்தப் பொற்கொடிவெண் தாமரைசேர்
நாமகளோ என்று கண்டோர் நாவேத்த—மாமணஞ்செய்
மண்டபத்தில் மேன்மையொடு வந்திருக்கச் செய்தனரால்
ஒண்டொடியார் உள்ளம் உவந்து. ௯௨

சீர்பெறுநல் செல்வன் வலப்பாகம் செல்வியுவந்
தேர்பெறவே தானங் கினி திருந்தாள்—தார்குழலார்
பொன்னனையாள் நற்குணமும் பொற்பும் பயன்பெற்ற
தென்னவுரைத் தார்பார்த் திசைந்து. ௯௩

மாமறையோர் வேதமநு மந்திரத்தா லேவளர்த்த
ஓம அனல்பெருகி யோங்கிடவே—தேமறையோர்
செய்சடங்கெல் லாஞ்செய்யச் சீரொடுநல் லாசிசொல
வையமெலாம் வாழ்த்த மகிழ்ந்து. ௯௪

மங்கலநா ணைத்தன் மணமகளின் ஒண்கழுத்தில்
செங்கையினால் கட்டினான் சீராளும்—துங்கன்
சிதம்பரவேள் நல்ல திருமணமா மைந்தன்
இதம்பெறவே பண்போ டிசைந்து. ௯௫

தையல்பா கன்குமரன் தார்வீர வாகு பிள்ளை
செய்யமணப் பெண்ணின் சிறியதந்தை—செய்யிழையின்
மென்கரத்தை நுண்ணறிவு மிக்க மணமகனின்
நன்கரத்தில் சேர்த்தான் நயந்து. ௯௬

2