உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

.வள்ளியம்மை சரித்திரம்.


தேனேர் மொழியாள் திருமகிழ்நன் தன் தங்கை
மானேர் விழியாள் மலர்க்குழலாள்—வானார்
புகழுடையாள் கற்பணிபூண் பொற்கொடியா ளைத்தன்
மகளென்றே காப்பள் வளர்த்து. ௱௩௩

தன் தங்கை யானசிவ காமியெனுந் தையலினிம்
மின்தன்னை மிக்க விழைவுடனே—நன்கெண்ணித்
தானருமை யோடும் தகவோடும் பேணிடுவள்
நானறிவேன் இங்கிதெலாம் நன்கு. ௱௩௪

சுந்தரஞ்சேர் கேள்வன் துணைவரையும் தன்னுடைய
மைந்தரென்றே கொண்டு வளர்த்திடுவள்—சிந்தை மகிழ்ந்
தன்னார் விரும்பும் அணியாடை யாதியன
பன்னும் முனரளிப்பள் பார்த்து. ௱௩௫

தன்னுடைய வீட்டிலுளார் தம்முள்ளே மாறுபடின்
அன்னையென நின்றவரை யாதரிப்பள்—- மன்னும்
இவளே மனைவி இவள்கொழுநன் செய்த
தவமே தவம்இத் தலத்து. ௱௩௬

உறவினரை உபசரித்தமை.



தன்னுடைய வீடுற்றுத் தங்கி யகமகிழ்ந்து
துன்னும் உறவினரைத் தோகைதான்— பன்னாளும்
நண்பா யுபசரித்த நன்மையையுங் கூறுவேன்
பண்போடும் இங்கே பரிந்து. ௱௩௭

தன்கேள்வன் முன்னுதித்த தார்குழலாள்வள்ளியம்மை
தன்கேள்வ னோடங்குச் சார்ந்தக்கால் —- நன்கே
அவருடைதாள் போற்றி அவரளித்த நீறு
தவமுடையாள் நெற்றி தரித்து. ௱௩௮