பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாயகனது நண்பர்களை உபசரித்தமை. 29

தண்பனிநீர் மென்கலவைச் சாந்தொடுதாம் பூலமுதல்
நண்புறுமா மின்னார்க்கு நல்குவாள்—நண்புரைகள்
சீர்சேருங் கல்வித் திறஞ்சேர்ந்தே பேசுவளவ்
வேர்சேர்மின் னாரோ டினிது. ௱௬௨

நல்லறத்தின் மாண்போடிந் நானிலத்து நின்றொளிரும்
இல்லறத்தின் மாண்பே யினிதாகத்—தொல்லறத்தின்
நூன்முறையே கூறுவள் அந் நூற்பொருளை நன்கேயத்
தேன்மொழியார் கொள்ளத் தெளித்து. ௱௬௪

சின்னேரம் அன்னார் சிலர்நன் மொழியாள்பால்
நன்னேர மாவசித்து நன்குவந்து—பொன்னேர்
நலஞ்சேர்வா ளின் தக்க நண்புபெற்றுத் தத்தம்
இலஞ்சேர்வார் நாளும் இனிது. ௱௬௫

அப்பெண்கள் செல்ல அயலூரி னின்றுவந்த
செப்பமுள பூவையர்க்குத் தேன்மொழியாள்—ஒப்பில்
விருந்து செய்வள் அன்னார் விருப்பமொடு கொள்ளும்
மருந்தெனவே யுள்ளம் மகிழ்ந்து. ௱௬௬

தனக்கிளைய மங்கையெலாம் தன்தங்கை மற்றோர்
தனக்குமுனம் வந்த தமக்கை—யெனக்கருதி
நட்புச்செய் தன்னார்க்கு நன்மைநிதம் செய்திடுவள்
கொட்பிலா மெய்யன்பு கொண்டு. ௱௬௭

நால்வருணத் தில்சிறந்தின் நானிலத்து நிற்கின்ற
மேல்வருணத் தில்பிறந்த மின்னாருஞ்—சேல்விழியாள்
நண்பால் குணத்தால் நலத்தரல் சகோதரத்தின்
பண்பெல்லாஞ் செய்வர் பரிந்து. ௱௬௮