பொது நற்குணம்.
என்றுபுகழ்ந் தெல்லாரும் இன்னாள் புகழ்தனையே
சென்றஇட மெல்லாஞ் சிறந்துரைப்பர்—என்றுமே
அன்னமிடும் பேறொத் தறப்பேற்றில் வேறுபே
றென்னவுள தம்மா இவண்.
௱௯௯
பொது நற்குணம்
மன்மதியாம் ஆனனத்து மானினத்தின் நாட்டமுளாள்
தன்மதியா லேயின்னுஞ் சார்ந்தகுணம்—என்மதியால்
இன்பாக வேதெரிந்த வாறே யியம்பிடுவேன்
அன்பாக வேசிலபா வால்.
௨௱
சற்குணமே பொற்கலமாத் தானணிந்த வள்ளியம்மை
நற்குணமாண் பெல்லாம் நவில்தரமோ—முக்குணத்தில்
தூய்தாம் முதற்குணத்தாள் சொல்லுமக ராசிபெற்ற
தாய்தான்மற் றெவ்வுயிர்க்குந் தான்.
௨௱௧
மங்கையின்நல் லுள்ளம் வளர்அருளே செய்யுமிவள்
செங்கனிவாய் இன்சொல்லே செப்பும்காண்—இங்கெவர்
நன்றே புரியுமிவள் நற்கரங்கள் மற்றிவையிங் [க்கும்
கொன்றேயுங் கண்டறியா வுற்று.
௨௱௨
கலைமகளே யாவள் கருணைநிறை கல்வியினில்
நிலமகளை யேபொறையில் நேர்வாள்—நலமார்
திருமகளே யாவள் திருவில் வசிட்டன்
அருமனையே யாவள்கற் பால்.
௨௱௩
சீர்சேர்நூ லேபயில்வாள் சீரியதே உள்விழைவாள்
ஓர்போதும் வீண்போதாய் ஓடவிடாள்—பார்புகழும்
தன்கேள்வற் கின்பம் தரும்செயலே செய்திடுவாள்
இன்கேள்வி யேகேட்பாள் இங்கு.
௨௱௪