பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூற்புறம்.


ஸ்ரீமாந் வ. உ. சிதம்பரம் பிள்ளையவர்கள்
சிறையிலிருந்து எழுதியனுப்பிய தமது சரித்திரக்
குறிப்பில் கண்ட பா.


“செந்தூர் நின்று சீரெலாம் திரட்டிச்
சொந்தமாக் கொண்ட சுப்பிர மணியன்
மகளாப் பிறந்து மாண்பெலாம் கொண்ட
மகராசி யென்னும் வள்ளி யம்மையை
நன்மனை யறங்களை நன்கு வளர்த்திட
முன்மனை யாக மொய்ம்பொடு கொண்டேன்.
செந்தூர் மணந்ததும் சிறப்புடன் எனதுதென்
அழகையூர் அடைந்ததும் அதன்பின் நிகழ்ந்ததும்
என்னுடை மைத்துனன் இயற்றிய வெண்பா
நன்னூல் தன்னில் நன்றாக் காணலாம்.

உதவியைக் கொன்றார் உய்யார் என்றும்
இதமுடை யவரை யியம்பல்நன் றென்றும்
முன்னோர் உரைத்ததால் மொழிவேன் அவள் குணம்
பின்னோர் அவற்றைப் பேணுதற் பொருட்டே.
எனதொரு வடிவமும் எனக்குறு தொண்டுமே
கனவினும் நனவினும் கண்டவள் நின்றனள்.
என்னைப் பெற்றோர் என்னொடு பிறந்தோர்
என்னை நட்டினோர் யாவரும் தன்னுடை
உயிரெனக் கருதி ஊழியம் புரிந்த
செயிரிலா மனத்தாள் திருமக ளனையாள். ௨௰