பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

நூற்புறம்.


மருவுதல் இலாமை மலைபோல் கண்டும்
கற்பனை யாகக் காணும் குலத்தின்
சொற்பிழை கொளல்' எனச் சொல்லிய தூய! ௫௰

துறந்தவர் தம்மையும் தொடருமோ குலம்இவண்?
மறந்தம் மொழியினை மதியா தொழிப்போம்.
அன்றியும் இஃதெலாம் ஆதியில் நினைந்தே
ஒன்றிடா தமர்த்தி ஊழியம் புரிந்திடின்
பிழையெனார் உலகப் பேதைமை யுணர்ந்தோர்.
பழமைபா ராட்டிப் பகுத்துப் பிரித்தல்
நன்றோ? நல்லோய்! நவிலுவார் நவிலுக
என்றும் போற்பணி இயற்றுவோம்." என்றனள்.
திருமந் திரநகர் சேர்ந்தபின் என்குல
குருவந் தனன்எனக் கூறி யவற்குறும் ௬௰

தட்சணை நிதியைத் தந்தனள். யானும்
பட்ச முடன் அவன் பக்கம் சென்றேன்.
செலவின் விவரம் தெரிய வினவினேன்.
பலவிவ காரம் பலத்தன: அவன்எனைச்
சீடன் அலையெனச் செப்பவும் நேர்ந்தது.
வீடுடன் வந்தேன்: விளம்பினேன். “அந்தோ !
பிறரும் நம்முரை பேசத் துணிவரே:
உறவினை விடுத்தல் ஒக்குமோ?” என்றனள்.
உற்றான் ஒருவன் ஒருநல் கட்சியோ
டுற்றான்: நல்கினான்: ஒளித்து வந்து பின் ௭௰

“உரிய கமிஷனை உதவுக” என்றான்.
புரிவ தறியாது பொள்ளெனச் சென்றுயான்
மங்கையை வினவினேன். மதியொடு பணிந்து “நும்