பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிதம்பரம்பிள்ளை யவர்கள் பா.

41.


செங்கைப் பொருளைத் திருப்பிக் கட்சிபால்
கொடுக்க; அவனைக் கொள்ளற்க.” என்றாள்
வடுக்கண் டொழிக்கும் மந்திரி யனையாள்.
இத்தகை யறிவினள் என்னரும் பிழைகளை
எத்தகை யுரியர் இயம்பினும் தன்னுடைய
பொறிகளே காணினும் பொய்யெனும் பேதைமை
செறிவுறக் கொண்டனள்: சிறப்புற நின்றனள். ௮௰

செய்யஎன் தந்தை சீர்கள் அவள் தாய்
செய்யா ததனால் திட்டுவன் அடிக்கடி:
மனம்பொறுக் காது மாற்றுரை பகர்வேன்:
அனம்போல் வந்தெனை யாற்றியே நிற்பள்.
எண்ணிலா நண்பரை இழுத்துக் கொண்டுயான்
உண்ணச் செல்லுவேன் உரையாது முன்னர்:
அறுசுவை யடிசில் அன்பொடு படைப்பள்:
சிறிதும் தாமதம் தெரிந்திலேன் என்றும்.
பாடுவள்: சுகமுறப் பாதம் வருடுவள் :
ஊடுவள்; உணர்த்த உவந்தின் பளிப்பள். ௯௰

உடையோ நகையோ ஒன்றும் என்றும்
படையெனக் கேட்டிலள்: பண்பெலாம் செய்தனள்.
தொள்ளா யிரத்தில் சுவாமி நாயகம்
“கள்ளா யிருந்தவள் கனவாச் சென்றனள்”
எனவுரைத் திடவும் இரவினில் விழித்தவன்
மனஉவப் புடனே மருந்தினை வழங்கவும்
நீங்கினள். அவள் இனம் நீங்கிக் கொள்ளேன்
பாங்கென் றவள்சிறு பாட்டன் புத்திரி
மகள்மீ னாட்சியை மணந்துபெற் றேன் இரு
மகார்“மேல் இனத்தொடு வரைவல் என்குணமே.”