பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆர். எ, பீற்றர்ப்பிள்ளை பவர்கள் கடிதம்.

47

னேயே நிற்கின்றது. தமது கணவரது நண்பர்கள் கூட்டாளிகள் முதலியவர்களுக்கு அவர்கள் செய்த உபசாரமும், மரியாதையும், வணக்கமும், அன்பும் நான் ஒருபோதும் மறக்கவே மாட்டேன். உங்களுக்கு நேர்ந்துள்ள துக்கம் உண்மையாகவே மிக மிகப் பெரியது. இத்துக்ககரமான மரணத்தில் யான் உங்களுடைய உண்மையான சகோதரனாக உங்களுடன் துக்க முறுகின்றேன். கடவுளது செயல்கள் நமது ஆராய்ச்சிக்கும் அளவுக்கும் அப்பாற்பட்டவை. அவர் நல்லவர்களைத் தெரிந்தெடுத்து விரைவாகத் தம்மிடம் சேர்த்துக் கொள்கின்றார் போலும். எனக்கு அடிக்கடி கடிதம் எழுதவேண்டுகிறேன். துக்கத்தில் ஆழ்ந்து வருந்துகிற,

திருச்செந்தூர், உங்கள் அருமைச் சகோதரன்,

1-7-1902. (ஒப்பம்) எ. உலகநாதன்.”

————————

திருச்செந்தூர் ஹாஸ்பிற்றல் சப் அஸிஸ்டண்ட் சர்ஜன்

ம-௱-௱-ஸ்ரீ ஆர். எ. பீற்றர்ப்பிள்ளையவர்கள் கடிதம்.

“அன்புள்ள சகோதரரவர்களே, நீங்கள் எழுதிய கார்டும் உங்கள் தந்தையவர்கள் எழுதிய கார்டும் இன்று காலையில் வரப்பெற்றேன். நான் நேற்று அனுப்பிய கார்டு உங்களுக்குக் கிடைத்திருக்கலாமென்று நம்புகிறேன். இருதயத்தைப் பிளக்கத்தக்க சமாசாரம் உண்மையென்று சந்தேகமற ஏற்பட்டுவிட்டது. பூரண இளமையும் பூரணநட்பும் வாய்ந்த ஒருவர் இவ்வளவு விரைவில் நம்மிடத்தினின்றும் பிரிக்கப்பட்டன ரென்று