பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராம சுப்பிரமணிய அய்யரவர்கள் கடிதம்.

51

யும் நானும் உங்களுடன் துக்கமும் உங்கள் மீது அநுதாபமும் படுகின்றோம்.

தங்கள் உண்மையான,

55, தையப்ப முதலிதெரு
சென்னை, ஜுலை 1, 1901.
(ஒப்பம்)
எம். வி. கிருஷ்ணசாமி.

——————


ஓட்டப்பிடாரம் போஸ்டு மாஸ்டரா யிருந்த பிரஹ்மஸ்ரீ
இராம சுப்பிரமணிய அய்யரவர்கள் கடிதம்.

அன்புள்ள நண்பர் அவர்களே,

உங்கள் மனைவியவர்களின் மரணத்திற்காக உங்களோடு மிகவும் துக்கிக்கிறேன். உங்களுக்கு நேர்ந்துள்ள நஷ்டம் மாற்றொணா வன்மையுள்ளது. அதை நீங்கள் எப்படிச் சகிப்பீர்களோ யான் அறியேன். இக்கடிதத்தை யெழுதும்போதும், அம்மாதரசியாரை நினைக்கும்போதும், எனது சரீரம் நடுங்குகின்றது. பூரண அன்பும், ஒழுக்கமும், வசீகரமும் வாய்ந்த அவ்வம்மையவர்களை நீங்கள் மனைவியாகக் கொண்டிருந்ததினால் நீங்கள் பேரின்பப் பேறுற்ற ஒரு பிரபு என்று நினைத்திருந்தேன். ஆனால் கடவுள் அப்பாக்கியத்தை உங்களிடமிருந்து பிடுங்கி விட்டார். மகராசியம்மை அவர்களிலும் மிகுந்த அழகும் செல்வமும் உள்ள வேறோர் மாதை இரண்டாந்தரம் நீங்கள் மணந்து கொண்டாலும், மகாராசியென்ற பெயரும் அவர்கள் குணமும் உங்களைத் துக்கத்திற்குள் அடிக்கடி தள்ளும். என் அருமையான நண்பரவர்களே! மனோதைரியம்