பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலிப் பாலம் ரயில்வே ஸ்டேஷனில் சிக்நலராயிருந்த
ஸ்ரீமாந். டி. நாராயண சுவாமி நாயுடு
அவர்கள் கடிதம்.

அன்பார்ந்த சகோதரர் அவர்களே,

அந்தோ! என் செய்வோம்! யான் மிகுந்த விசனத்துடன் உங்கள் அருமை மனைவியவர்களது. மரண சமாசாரத்தை ஸ்ரீமாந். எஸ். பழனியாண்டி முதலியாரவர்கள் மூலமாக அறிந்தேன். தங்கள் மனைவியவர்களைப் போல அன்பும் அடக்கமும் நிறைந்துள்ள ஒரு மாதை அடைதல் அரிது. யான் அவர்களது மரணத்தைக் குறித்து உங்களோடு மிகுந்த துக்கமுறுகின்றேன். இவ்வுலகத்தின் இயற்கையை அறிந்த நீங்கள் கழிந்த காரியத்திற்கு வருந்த வேண்டாமென்று தங்களை வேண்டிக் கொள்ளுகிறேன். எனினும், அத்துணை அழகும், ஒழுக்கமும், அன்பும், புகழத் தக்க நற்குணங்களும் வாய்ந்த ஒரு பெண் தங்களுக்கு இரண்டாவது மனைவியாக வரக் கூடுமென்று ஒருவரும் உறுதியாகச் சொல்ல முடியாது. எனது சிறிய அநுபவத்தில் நல்ல ஜனங்களே அகால மரணம் அடைகின்றார்கள். இது மிக விசனப்படத் தக்கது.

திருநெல்வேலி ரயில்வே
ஸ்டேஷன். 20-6-1901.
தங்கள் உண்மையான,
(ஒப்பம்) நாராயணசாமி