பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/94

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகமே புறம்.

இதைப்பற்றிய சில புதிய மதிப்புரைகள்

“இது ஜேம்ஸ் ஆலன் என்னும் தத்துவஞானியானவர் ஆங்கில பாஷையில் இயற்றியுள்ள ‘அகத்திலிருந்து புறம்’ என்னும் பொருள்படும் பெயரினையுடைய நூலின் மொழி பெயர்ப்பாகும். இப்புத்தகத்தில் ஆங்காங்கு தமிழ் நூலாசிரியரின் முதுமொழிகள் சமயோசிதமான விடங்களிற் சேர்க்கப்பட்டுள்ளன. அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய இந்நான்கு புருஷார்த்தங்களை அடைதற்கு இன்றியமையாச் சாதனமாயிருக்கும் அகத்தை ஒருவழிப்படுத்தி நடத்துவதே மகான்களின் இயல்பாதலால், இந்நூலை இயற்றிய பிள்ளை யவர்கள், இதனைக் கற்பிப்போரும் கற்போரும் இத்தன்மையரா யிருக்கவேண்டுமென்பதை வெகு அழகாகப் பாயிரத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்நூலைத் தமிழறிந்த ஒவ்வொரு ஆடவரும் பெண்டிரும், சிறுவரும் சிறுமியரும் சுற்கவேண்டுமென்ற பேரவாவுடன் இதனாசிரியரவர்கள் தெள்ளிய தமிழில் இதை யெழுதி முடித்திருக்கிறார்கள். இது பெரிய எழுத்துக்களில் உயர்ந்த வெண்மைக் காகிதத்தில் அச்சிடப்பட்டிருக்கிறது.”— இந்துநேசன், சென்னை.

“மனத்தினுடைய சக்தியும், அதனை நல்வழியிற் செல்லும்படி பழக்கும் முறையும், ஒழுக்கத்தின் விழுப்பமும், மெய்ஞ்ஞானம் அடைதற்கு மனம் பக்குவ மடைந்திருக்க வேண்டுவது அவசியம் என்னும் உண்மையும், தள்ளப்பட வேண்டிய தீயவொழுக்கங்கள் கொள்ளப்படவேண்டிய நல்ல வொழுக்கங்கள் இவைகளின் விவரமும், பிறவும் இந்நூலில் சுருக்கமாகவும் விளக்கமாகவும் விவரிக்கப்படுகின்றன. மனத்தின் தன்மையையும் அகத்தே நிகழும் நிகழ்ச்சிகளையும் விரித்துரைப்பதற்கு நம் தமிழ் மொழியில் இறையனார் களவிய 78