அகமே புறம்.
பல நூல்களை ௸ நூலாசிரியரைக்கொண்டு வெளியிடச் செய்ய வேண்டும்.”—கமலாஸனி, திருவாரூர்.
“இந்நூலின் நடையமைப்பு கடுகுக்குள் கடலையடைத்த விதமாய் ஒளிர்கின்றது. அறஞ்செய விரும்பு என்ற வாக்கியம் எத்துணைச் சுருக்கமாகவும் பொருட்சுவை நிரம்பியதாகவும் இருக்கின்றதோ அத்துணைச் சுருக்கமும் பொருட் சுவையுமுள்ள வாக்கியங்களால் எழுதப்பட்டிருக்கும் இந்நூலை ஆயிரமுறை திருப்பித் திருப்பிப் படிப்பினும், படித்து விட்ட நூல் போன்று தோன்றாத ஒரு விசேஷம் இந்நூலின் முக்கிய அம்ஸமாகும். இந்நூலிலுள்ள விஷயங்களை எடுத்துக்கொண்டு அபிப்பிராயம் சொல்ல நமக்கு சக்தி போதாது. இதிலுள்ள விஷயங்கள் நித்திய பாராயணம் செய்யத்தக்க அத்துணை உயர்நல மமைந்தவை யென்று மட்டும் சுருக்கமாய்க் கூறி முடிக்கிறோம்.”—பிரஜானுகூலன், ஸ்ரீரங்கம்.
“இது ஜேம்ஸ் ஆவன் என்பவரியற்றியுள்ள நூல்களுள் ஒன்றன் மொழிபெயர்ப்பாகும். இது நல்ல நடையில் வேண்டுமிடங்களில் வேண்டிய செய்யுட்களை யுதாரணமாகக் காட்டி யெழுதப்பட்டிருக்கின்றது. இப்புத்தகம் பெரும்பான்மையும் மனத்தினியல்பினை நன்கு விளக்கிக் கூறிப் போதிக்குந் தன்மையதாக விருக்கின்றது. இஃதொவ்வொரு வரும் வாசித்தற்குரியதாம்.”— லோகோபகாரி, சென்னை.
“இந் நூலாசிரியாது ஆங்கில திராவிட பண்டிதத்தன்மை இப்புத்தகத்தை வாங்கி வாசிப்போர்க்குத் தெற்றென விளங்கும். அன்றியும், அறிவை இது நன்கு விருத்தி செய்யும்.”—வித்தியாபாஸ்கரன், கிள்ளான்