மனம் போல வாழ்வு.
செயல்சுன் தினைப்பின் மலர்கள்; இன்பமும் துன்பமும் அதன் கனிகள். இவ்வாறாக, மனிதன் இவைகளை விளைவித்துக்கொள்கிறான்.
மனமெனும் நினைப்பே நமைபாக் கியது;
நினைப்பால் நாம்நம் நிலைமையை உற்றனம்,
ஒருவன் நினைப்புக் கருமறம் பற்றிடின்,
எருதுபின் உருளைபோல் வரும்மநனி துன்பமே;
ஒருவன் நினைப்புத் திருஅறம் பற்றிடின்,
தன்னிழல் போல மன்னும் இன்பமே.
மனிதன் நியதிக் கிரமத்தில் உண்டானவனே யன்றித் தந்திரத்தால் அல்லநு மந்திரத்தால் ஆக்கப்பட்டவன் அல்லன். பிரத்தியக்ஷமான ஸ்தூலப்பொருள்கள் அடங்கிய இவ்வுலகத்தின்கண் காரணகாரியங்கள் கிரமமாகவும் நிச்சயமாகவும் நிகழ்தல்போல, பிரத்தியக்ஷமல்லாத நினைப்புலகத்தின்கண்ணும் காரணகாரியங்கள் கிரமமாகவும் நிச்சயமாகவும் நிகழ்கின்றன.மேம்பாடும் தெய்வத்தன்மையும் வாய்ந்த ஒழுக்கம், கடவுளின் கிருபையாலாவது தற்செயலாயாவது உண்டானதன்று; அது நேர்மையான நினைப்புக்களை இடைவிடாது நினைத் துவந்ததன் நேரான பயனாகவும், தெய்வத்தன்மை வாய்ந்த நினைப்புக்களோடு நீடித்த காலம் விருப்பத்தோடு பழகிவந்த பழக்கத்தின் நேரான காரியமாகவும் உண்டானதே. அங்ஙனமே, இழிவும் மிருகத்தன் மையும் பொருந்திய ஒழுக்கமும், இழிவான நினைப்புக்
18