உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதனூலின் பாயிரம்.

தியானமும் அநுபவமுமாகிய இரண்டின் பலனாக வெளிவந்த இப்புஸ்தகம் நினைப்பின் வலிமையைப் பற்றி விரிவாகக் கூறுகின்ற ஒரு பெரிய நூல் அன்று : “ தம்மை ஆக்குபவர் தாமே” என்னும் உண்மையைப் புருஷர்களும் ஸ்திரீகளும் கண்டு உணருமாறு செய்யக் கருதிய சிறு நூலே, மனிதர் தாம் உட்கொள்ளும் நினைப்புக்களைப் போலவே ஆகின்றனர் ; ஒழுக்கமாகிய அகஉடையையும் நிலைமையாகிய புறஉடையையும் செய்கின்ற கர்த்தா மனமே. அஃது அவ்வுடையை இதுவரையில் மடமையோடும் துன்பத்தோடும் நெய்து வந்தது ; இனி அறிவோடும் இன்பத்தோடும் நெய்யும்.

ஜேம்ஸ் ஆலன்.