பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
வலிமைக்கு மார்க்கம்.

றனர்; சிலர் பொருளையோ புகழை யோ அவாவி, அவற்றை அடைதற்காக மற்றைய எல்லாவற்றையும் கீழ்ப்படுத்துகின்றனர் ; சிலர் மதசம்பந்தமான சடங் குகளைச் செய்து திருப்தியடைகின்றனர்

அவாவிய சுகம் எல்லோருக்கும் கிடைப்பது போலத் தோற்றுகின்றது ;ஆன்மா சிறிது காலம் துன் பத்தை மறந்து இன்பத்துள் களிக்கின்றது. ஆனால், சுடைசியில் ஒரு நாள் ஒரு பெரும் நோயோ, துக் சமோ, கவற்சியோ, கேடோ தன்னைப் பலப் படுத்திக்கொள்ளாத ஆன்மாவைத் திடீரெனத் தாக்குகின்றது ; ஆன்மா அதுவரை கொண்டிருந்த இன்பம் சிதறுண்டு போகின்றது. அப்படியே ஞானத்தால் தன்னைப் பலப்படுத்திக் கொள்ளாத மனிதனுடைய ஆன்மாவின் மீது எந்த நிமிஷத்திலும் விழுந்து அதனை அழித்து விடத்தக்க ஒரு கூரிய வாள் ஒவ்வொரு பொறியின்பத்தின் தலைமீதும் தொங்கிக் கொண்டிருக்கின்றது,

குழந்தையானது குமரன் அல்லது குமரி யாவ தற்கு அழுகின்றது ; குமரனும் குமரியும் தமது கழிந்த குழந்தைப் பருவத்தை நினைத்துப் பெரு மூச்சு எறிகின்றனர். எளிய மனிதன் தனது வறுமை விலங்கால் வருந்துகிறான் ; வலிய மனிதன் தன்பால்