பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரும் இன்பத்தின் மர்டம்.

துள்ள அநேக மனிதர் தாம் செல்வத்தைச் சம்பா தித்ததனால் உண்டாய சுயாய போகங்கள் தமது வாழ்க்கையின் இன்பத்தைக் கவர்ந்துகொண்டன வென்றும், தாம் தரித்திரராயிருந்த காலத்தில் அடைந்த இன்பத்தைத் தாம் செல்வவந்தாரன காலத்தில் ஒரு போதும் அடைந்ததில்லை யென்றும் ஒப்புக்கொண்டிருக்கின்றனர். அப்படியானால், இன்பமாவது யாது? அதனை அடைவது எவ்வாறு? அஃது ஒரு கற்பனைய - அல்லது ஒரு மாயமா? துன்பந் தானா நித்தியமா யுள்ளது? என்னும் வினாக்கள் உண்டாகின்றன. நாம் சிரத்தைபோடு கவனித்து ஆலோசிப்போமா னால், ஞான மார்க்கத்தில் பிரவேசித்துள்ளவர்கள் தவிர மற்றவர்களெல்லாம் அவாவை நிறைவேற்று வதனால் மாத்திரம் இன்பத்தை அடையலாமென்று நம்பியிருக்கிறார்களென்பது நமக்குத் தெரியும். அஞ்ஞானமாகிய நிலத்தில் வேரூன்றியிருப்பதும் சுயாய அவாக்களாகிய நீரால் இடைவிடாது பாய்ச் சப்படுவது மான இந்த நம்பிக்கை தான் உலகத்தி லுள்ள சகல துன்பங்களுக்கும் காரணம், நான் அவா என்னும் சொல்லை ஸ்தூலமான மிருக போகம் களை மாத்திரம் குறிக்கும் பொருளில் உபயோகிக்க வில்லை ; இன்ப சொரூபமாக வெளிப்படுகின்ற ஆன்மாவினது அழகையும், சாந்தியையும், தூய்மை யையும் இழக்கும்படி செய்து, புத்திசாலிகளையும்