பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வலிமைக்கு மார்க்கம், வை. இக்கடவுள் ஞானத்தை அடைவதால் மாத் திரம் இன்பம் இன்னதென்று தெரிய முடியும், நீங் கள் சுயநயத்தோடு உங்கள் சரீர சுகத்தை நாடிக் கொண்டிருக்குங் காலமெல்லாம் இன்பம் உங்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும்; நீங்கள் துன்ப வித் துக்களை விதைத்துக்கொண் டிருப்பீர்கள். மற்றவர் களுக்கு ஊழியம் செய்வதில் 'யான்' என்பதை எவ்வளவுக் கெவ்வளவு நீங்கள் இழக்கின்றீர்களோ, அவ்வளவுக் கவ்வளவு இன்பம் உங்களிடம் வந்து சேரும், நீங்கள் இன்பப்பலனை அறுப்பீர்கள். அன்பு செய்தலால் உள்ளம் ஆனந்தம் எய்துமல்லால், அன்பு செயப்படலால் அஃதெய்தா-தின்புயிர்கட் கீதலினால் உண்டல்லால் ஈயப் படுதலினால் மாதே! இலையணுவும் மற்று. எஃதனை நீவேண்டினையோ,எஃதுநிற்குவேண்டுவதோ அஃதனையே நீயீவாய் ஆருயிர்கட்-கஃதுநின தான்மா உணும் உணவாம்; அஃதால்மெய் வாழ்வடைவாய்; . தேன்மா மொழியாய்! தெரி. 'யான்' என்பதைப் பற்றுங்கால், நீங்கள் துன் பத்தைப் பற்றுகின்றீர்கள்; 'யான்' என்பதைவிடுங் கால், நீங்கள் இன்பத்தை அடைகின்றீர்கள். சுய நயநாட்டம் இன்பத்தை இழக்கும்படி செய்யும் அவ் வளவே யன்றி இன்பத்திற்கு மூலமென்று நாம் நம்புகிற பொருள்களையும் இழக்கும்படி 96