பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வலிமைக்கு மார்க்கம். நிலையில்லாததுமான 'யான்' என்னும் பொருளை இழப்பதற்கு நீங்கள் எப்பொழுது விரும்புவீர்சு ளோ, அப்பொழுது அதுவரையில் உங்களுக்குத் துன்பமான நஷ்டம்போலத் தோன்றிக்கொண் டிருந்த அவ்விழப்பு இன்பமான இலாபமாகக் காணப்படும். , ஆனால், இலாபத்தை அடைய வேண்டுமென்ற நோக்கத்தோடு ஒன்றை விடுவ தைப் பார்க்கினும் பெரிய மயக்கமாவது, துன் பத்தைத் தரும் மூலமாவது, வேறில்லை ; வேண் டியவற்றை விட்டுவிடுவதற்கும் நஷ்டத்தை அது பவிப்பதற்கும் பிரியங்கொள்ளலே உண்மையான வாழ்விற்கு மார்க்கம். இயற்கையில் அழிந்து போகும் பொருள்களை நமக்கு ஆதாரமாகக் கொண்டிருக்குங்காலையில், நாம் எப்படி உண்மையான இன்பத்தைக் காணமுடியும்? என்றென்றும் நிலைநிற்கும் பொருளை நமக்கு ஆதார மாகக் கொண்டால் மாத்திரமே, நாம் உண்மையான இன்பத்தைக் காணமுடியும். ஆதலால், நிலையில் லாத பொருள்களைப் பற்றிக்கொண்டிருத்தலையும் அவாவிக்கொண்டிருத்தலையும் நீங்கள் விடுங்கள் ; உடனே நித்தியப் பொருளின் அறிவை நீங்கள் அடை வீர்கள். 'யான்' என்பதை ஒழித்துத் தூய்மையும் சுயநயந்துறத்தலும் அகண்ட அன்புமாகிய குணம் கள் உங்களிடம் மேலும் மேலும் வளருங்காலையில், அந்நித்தியப் பொருளின் அறிவை உங்களுக்கு அகாரமாக நீங்கள் கொள்வீர்கள். அப்பொழுது, 98