பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வலிமைக்கு மார்க்கம். தனமாக இங்கும் அங்கும் ஓடுகின்றார்கள்; இன்பமா னது முன்னரே தமது அகத்துள்ளும், தம்மைச் சுற் தியும், பிரபஞ்ச முழுவதும் உள்ளதென்றும், தமது சுயநய நாட்டத்தால் அதனைத் தாம் காணவில்லை யென்றும் அறிகிற வரையில் அவர்கள் இன்பத்தைத் காண முடியாது. ஆசிரியப்பா. இன்பெனும் மங்கையை என்பொரு ளாக்கத் தேக்கு திராட்சை பாக்கு வனம் கடந் தேகினேன் ; ஓடினள் ; வேகமா ஓடினேன், பொள்ளெனக் குன்றினும் பள்ளத் தாக்கினும் நண்ணிய வயலினும் தண்ணிய நிலத்தினும் ; நீரினோட் டங்களை வீரமோடு கடந்து கழுகல றும்மலை தழுவி மேல் ஏறினேன் ; ஒவ்வொரு நாட்டையும் ஒவ்வொரு கடலையும் விரைந்தே கடந்தேன் ; விரைந்தவள் தந்திர மாக முந்திஓ டினளே. யான்மிகக் களைத்துக் கான்மிகத் தளர்ந்து பாழ்ங்கரை யொன்றில் வீழ்ந்தயர்ந் திருந்தேன். ஒருவனுண வென்றான், ஒருவனிதி யென்றான் ; என்புதெரி கரங்களில் அன்புடன் அளித்தேன்; ஒருவன நு தாபமும் ஒருவனுறை யிடமும் அளித்தருள் என்றனர் ; களித்துடன் அளித்தேன்; - 100