பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வெனரும் இன்பத்தின் மர்மம். இல்லார்க் கியன்றன எல்லாம் ஈந்தேன்; இனியால் லின்பம் கனியுமெய் யுருவொடு வந்துநின் றுனக்குச் சொந்த மாதா னேனெனக் காதிலோ தினளே, பர்லி என்னும் ஆங்கிலக் கவியின் இவ்வழகிய பாக்கள் வளரும் இன்பத்தின் மர்மத்தை விளக்கு கின்றன. நீங்கள் சரீரப் பற்றையும் மற்றைய நிலை ' யில்லாத பொருள்களின் பற்றுக்களையும் விடுங்கள் ; நீங்கள் உடனே சரீரமில்லாததும் நிலையுள்ளதுமான பொருளாவீர்கள். தனது அற்ப நலங்களுக்காகச் சகல பொருள்களையும் கீழ்ப்படுத்துவதற்கு நாடு கின்ற குறுகிய தன்மையுள்ள 'பான்' என்பதை விடுங்கள்; நீங்கள் தேவகணங்களின் சகவாசத்தை யும், போருளாக விளங்காநின்ற கடவுட்டன் மையை யும். கடவுளகத்தையும் அடைவீர்கள். நீங்கள் 'யான்' என்பதை மறந்து மற்றவர்களுடைய துக்கங்களை உங்கள் துக்கங்களாகக் கருதி மற்றவர்களுக்கு ஊழியம் செய்யுங்கள் ; தெய்வ இன்பம் உங்களைச் சகல துன்பங்களினின்றும் துக்கங்களினின்றும் லெ ளியேற்றிவிடும். “ஒரு நல்ல நினைப்போடு முதல் படி.. ஏறி, ஒரு நல்ல சொல்லோடு இரண்டாம்படி ஏறி, ஒரு நல்ல செயலோடு மூன்றாம்படி ஏறி, நான்சுவர்க் கத்ரை அடைந்தேன்.” என்றனர் ஒரு பெரியவர். நீங்களும் அவ்வாறு சுவர்க்கத்தை அடையலாம், சுவர்க்கம் தூரத்தி லில்லை ; இங்கேயே யிருக்கின்றது; 101