பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வளரும் இன்பத்தின் மர்மம். துன்பத் தினின்று நீங்கள் நீங்கி, நீங்கள் பிறருக்கு ஈதலால் உங்கள் பொருளை ஈதலால்-உங்கள் விவே கத்தை ஈதலால் - உங்கள் அகத்துள் வளராநின்ற அன்பையும் ஒளியையும் ஈதலால்- உளதாகும் இன் பத்தைக் காண்பீர்கள். நீங்கள் அப்பொழுது கொள்வதினும் கொடுத்தல் அதிக இன்பத்தைத் தரும்” என்று அறிவீர்கள். ஆனால், உங்கள் கொடை 'யான்' என்னும் பற்றுச் சிறிது மில்லாததாயும், பிரதிபலனைக் கருதாததாயும், உள்ளத்தின் அடியி னின்று வெளிப்படுவதாயும் இருத்தல் வேண்டும். கலப்பற்ற அன்பால் நிகழும் கொடை எப்பொழு தும் இன்பத்தைக் கொண்டுவரும்: நீங்கள் கொடுத்த பின்னர், உங்களுக்கு வந்தனம் அளிக்கவில்லை யென் முவது, உங்களை முகஸ்துதி செய்யவில்லை யென்றா வது, உங்கள் பெயரைப் பத்திரிகையில் பிரசுரிக்க வில்லை யென்ஈவது நீங்கள் வருத்தப்படுவீர்களா யின், உங்களுடைய கொடை அன்பினாற் செய்யப் பட்ட தன் றென்றும், நீங்கள் கொள்வதற்காகவே கொடுத்தீர்க ளென்றும், நீங்கள் உண்மையில் உலோ பம் செய்தீர்களே யன்றிக் கொடையைச் செய்ய வில்லை யென்றும் அறிந்து கொள்ளுங்கள், மற்றவர்களுடைய க்ஷேமத்திற்காக 'யான்' என்பதை நீங்கள் விட்டுவிடுங்கள்; நீங்கள் செய் யும் காரியங்களிலெல்லாம் 'யான்' என்பதை மறந்து விடுங்கள் ; இதுதான் வளரும் இன்பத்தின் மர்மம். சுயநயம் உங்களை அணுகாத விதத்தில் உங்களை எப் 103 -