பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலிமைக்கு மார்க்கம்.

பொழுதும் ஜாக்கிரதையாக நீங்கள் காத்துக் கொண்டு, அகத்துறவாகிய தெய்வ பாடத்தை நீங்கள் உண்மையோடு படியுங்கள் ; அவ்வாறு செய்யின் இன்பத்தின் மிக மிக மேலான ஸ்தானங்களுக்கு நீங்கள் ஏறுவீர்கள். அழியாமையாகிய பிரகாச முள்ள உடையை உடுத்துக் கொண்டு, மேகத்தால் ஒரு பொழுதும் மறைக்கப்படாத பேரின்பமாகிய சூரியப் பிரகாசத்தில் நித்தியமாக நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். to |