இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வளரும் இன்பத்தின் மர்மம்
ஆசிரியப்பா.
ஒருபொழுதும் அழியா உயர்ந்தஇன் பத்தை மருவுதற் கெண்ணி வருந்துகின் றனையா? துன்பநாள் உன்னைத் தொடவிடா நித்திய இன்பினை அடைவதற் கெண்ணுகின் றனையா? அன்பும் வாழ்வும் அமைதியு மாகிய மின்புனல் அருவியை விரும்புகின் றனையா? மயல்தரும் அவாவெலாம் மாய்த்துச் சுயநய நாட்டமுந் தொலைக்கவே ருடனே.
துன்பமும் பிணியும் துக்கமும் நிறைந்துள
வன்புதர் நெறிகளில் வருந்துகின் றனையா? இளைத்தவுன் அடிகளை ஈாக்கும் வழிகளில் களைத்தலைந் துழன்று கவல்கின் றனையா? அழுகையும் துக்கமும் அணுவும் அணுகா விழுமிய வீட்டை விரும்புகின் றனையா? சுயநய அகத்தினைத் துறந்து பரநய அகத்தினைப் பார்த்தடை வாயே.