பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வலிமையை அடைதல், ஒப்பிட்டுப் பார்க்குங் காலையில், சுயநயம் எவ்வளவு இருண்ட தென்பதையும், மடத்தன மென்பதையும் நாம் காண்போம்; அப்பொழுது தான் தன்னய நாட்டம் தன்னையே அழிப்பதென்பதைத் தெரி வோம். பிரகிருதியானது ஒன்றையும் தனக்கென்று வைத்துக்கொள்ளாமல் எல்லாவற்றையும் எல்லா உயிர்களுக்கும் கொடுத்துக்கொண்டிருந்தும், அஃது ஒன்றையும் இழப்பதில்லை; மனிதன் எல்லாவற்றையும் தனக்கென்று வைத்துக்கொண்டிருந்தும், அவன் - ஒவ்வொன்றையும் இழந்து விடுகிறான். நீங்கள் உண்மையான வலிமையை அடைய விரும்புவீர்களாயின், நியாயமாகச் செய்யப்படும் ஒவ் 'வொன்றும் அநியாயமாக முடியுமென்று அநேகர் கொண்டிருக்கிற தப்புநம்பிக்கையை நீங்கள் கொள் ளாதீர்கள், ஒழுக்கத்தின் வலிமையிலுள்ள உங்கள் நம்பிக்கையை அசைக்கக்கூடிய 'போட்டி' என்ப தற்கு நீங்கள் இடங்கொடுக்காதீர்கள், - 'போட்டி' யின் விதிகளைப் பற்றி மனிதர் பேசுங்காலையில் நான் சிறிதும் கவனிப்பதில்லை ; ஏனெனில், ஒருநாள் அவற்றையெல்லாம் ஓட்டுவதும், இப்பொழுதும் அவற்றையெல்லாம் நியாயமான மனிதனுடைய அகத்திலிருந்தும் வாழ்க்கையிலிருந்தும் ஓட்டுகிறது மான மாறாத சட்டத்தை நான் அறிந்திருக்கிறேன் ; இச் சட்டத்தை அறிந்திருப்பதனால், சகல வகை அயோக்கியங்களும் அழிவை அடையு மென்று தெரிந்து அசையாத அமைதியுடன் இருக்கின்றேன். 107