பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வலிமைக்கு மார்க்கம். நியாய மென்று நீங்கள் நம்புகிற காரியத்தையே சகல சந்தர்ப்பங்களிலும் செய்யுங்கள். மெய்ச்சட் டத்தை நம்புங்கள் ; பிரபஞ்சமெல்லாம் வியாபித்திருக் காநின்ற தெய்வ சக்தியை நம்புங்கள் ; ஒரு போதும் உங்களை அது கைவிடாது ; எப்பொழுதும் உங்களை அது காப்பாற்றும், அத்தகைய நம்பிக்கையால் உங்களுடைய 5டங்களெல்லாம் இலாபங்களாக மாறும்; உங்களை வருத்துகிற நிந்தனைகளெல்லாம் ஆசீர்வாதங்களாக மாறும். உண்மையையும், தயா ளத்தையும், அன்பையும் ஒருபொழுதும் நீங்கள் கை விடாதீர்கள், அவை உங்களை உண்மையான வலிமை யுள்ள நிலைமைக்கு உயர்த்துமாகலான். தனக்குப் போய்த் தானம்” என்று உலகத்தார் சொல்வதை நீங்கள் நம்பாதீர்கள். அதனை நம்புதல் ஒருவனது சொந்த சௌகரியங்களை மட்டும் நினைக்கும்படி செய் யுமேயன்றி, மற்றவர்களைப் பற்றி நினைக்கவே விடாது, அதனைக் கைக்கொண்டு நடக்கிறவர்களுக்கு ஒரு நாள் வரும்; அந்நாளில் அவர்களை எல்லாரும் கை விட்டுவிடுவார்கள்; அவர்கள் தனிமையாலும் துன் பத்தாலும் அழும்பொழுது அவர்களை எனென்று கேட்கவும் அவர்களுக்கு உதவிபுரியவும் ஒருவரும் முன்வரமாட்டார். மற்றவர்களைப் பற்றி நினைத்தற்கு. முன்னர்த் தன்னைப்பற்றி நினைத்தல் மேம்பாடும் தெய் வத்தன்மையுமுள்ள ஒவ்வொரு மனோ எழுச்சியையும் தடுத்தும் கெடுத்தும் அழித்தும் விடும். - உங்கள் ஆன்மா விரிவுறுக; உங்கள் அகம் அன்போடும் தயாளத்தோடும் மற்றவர்களிடத்துச் செல்லுக; 108