பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
துன்பத்தின் கற்பனை.

றென்றும் தத்துவ மன்றென்றும், ஆனால் கழிந்து போகக்கூடிய ஒரு மனித அநுபவமென்றும் தெரிய வரும்; ஆதலால், துன்பமானது கற்க விரும்புகிறவர் களுக்கு ஓர் ஆசிரியன் போல உதவுகின்றது. துன்ப மானது உங்களுக்குப் புறத்திலுள்ள ஒரு பொரு ளன்று ; அஃது உங்கள் அகத்தின் ஓர் அநுபவம்; நீங்கள் உங்கள் அகத்தைப் பொறுமையோடு ஆராய்ந்து பார்த்து ஒழுங்கு படுத்துவதால் நீங்கள் துன்பத்தின் மூலத்தையும் தன்மையையும் நாளடை வில் காண்பீர்கள் ; பின்னர் அஃது உங்களை விட்டு அறவே நீங்கிவிடும்.

ஒவ்வொரு துன்பத்தையும் திருத்தலும் பரிகரித்தலும் கூடும் ; ஆதலால், அது நிலையில்லாதது. அது பொருள்களின் உண்மையான இயற்கையை யும் சம்பந்தத்தையும் அறியாத அஞ்ஞானத்தில் வேருன்றி யிருக்கிறது ; அவ்வஞ்ஞான நிலைமையில் நாம் இருக்குங் காலமெல்லாம் நாம் துன்பத்திற்கே ஆளா யிருக்கிறோம். பிரபஞ்சத்திலுள்ள சகல துன் பங்களும் அஞ்ஞானத்தின் காரியங்கள் ; அவற்றின் கற்பனைகளை நாம் கற்றுக்கொள்வதற்கு விருப்ப முடையவராகவும் தயாராகவும் இருப்போமானால் அவை நம்மை முற்றிலும் உயர்ந்த அறிவாளிக ளாக்கிவிட்டு நீங்கிவிடும். ஆனால், மனிதர் எப்பொ ழுதும் துன்பத்தில் இருக்கின்றனர் ; அஃது அவ ரைவிட்டு நீங்குவதில்லை; ஏனெனில், அஃது அவ ருக்குக் கற்பிக்கக் கொண்டிருக்கும் பாடங்களை

5