பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
துன்பத்தின் கற்பனை,


அஞ்ஞானமும் துன்பமும் அதிக ஆழத்தில் வேரூன் றியனவாகவும் எளிதில் நீக்க முடியாதனவாகவும் இருக்கின்றன.

நன்மைக்கு ஒளியையும் தீமைக்கு இருளையும் உபமானங்களாகக் கூறுகின்றனர். இவ்வுபமானங்கள் நன்மை தீமைகளுடைய முழு அர்த்தத்தையும் உனண்மை யையும் விளக்கத்தக்கவை, ஒளி பிரபஞ்சமெல் லாம் விளக்கும் சூரியனது உண்மைத்தோற்றம். அதுபோல, நன்மை பிரபஞ்சமெல்லாம் பரவி உயிர் களைக் காக்கும் மெய்ப்பொருளினது உண்மைத் தோற்றம். இருள் சூரியனது ஒளியின் ஒரு பாகத் தை மறைக்கும் பூமியின் நிழலாகிய இன்மைப்பொ ருள். அது போல், தீமை மெய்ப்பொருளினது நன்மையின் ஒருபாகத்தை மறைக்கும் ஜீவனது நிழலாகிய இன்மைப்பொருள், இரவு தனது கறுப்புப் போர்வையால் நமது பூமியின் ஒரு பக்கத்தை மாத் திரம் மறைக்கிறது; அதன் மற்றைய பாகங்களி லெல்லாம் ஒளி விளங்கிக் கொண்டிருக்கிறது. அது போல, அஞ்ஞானம் தனது கேடும் துன்பமும் துக்க முமாகிய கறுப்புப் போர்வையால் மெய்ப்பொருளின் ஒருபாகத்தை மாத்திரம் மறைக்கிறது ; அதன் மற் றைய பாகங்களிலெல்லாம் ஆக்கமும் இன்பமும் சுக மும் விளங்கிக்கொண்டிருக்கின்றன. ஒளி மயமான சூரியனைப் பூமி மறைப்பதால் அஃது இருளால் மூடப்படுகின்றது. அப்படியே ஞான மயமான மெய்ப் பொருளை ஜீவன் மறைப்பதால் ஜீவன் அஞ்

7