பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
வலிமைக்கு மார்க்கம்.

ஞானத்தால் மூடப்படுகின்றது. இருளால் மூடப் பட்ட புவியினர்கள் நல்ல வழியையும் தீய வழியை யும் அறியமாட்டாது தீய வழியில் சென்று இடர்ப் படுகின்றனர். அவ்வாறே, அஞ்ஞானத்தால் மூடப் பட்ட ஜீவர்கள் நன்மையையும் தீமையையும் பகுத் தறிய மாட்டாது தீமையைப் புரிந்து கேட்டையும் துன்பத்தையும் துக்கத்தையும் அடைந்து வருந்து கின்றனர். இரவின் இருளை யடைந்தே பகலின் ஒளிக் குச் செல்லவேண்டும். அவ்வாறே, அஞ்ஞானத்தின் துன்பத்தை அநுபவித்தே ஞானத்தின் இன்பத்திற்குச் செல்ல வேண்டும். ஆனால், சிலர் "துன்பத்தின் வழியாகச் செல்வானேன்?” என்று வினவல் கூடும். அஞ்ஞானத் தால் நீங்கள் அவ்வழியிற் பிரவேசித்திருக்கிறீர்கள் ; நீங்கள் அவ்வழியாகச் செல்வதனால் இன்பத்தின் பெருமையை நன்கு அறிவீர்கள், இருள் வழியாகச் செல்பவர் ஒளியின் பெருமையை நன்கு அறிவது போல், துன்பம் அஞ்ஞானத்தின் நேரான காரிய மாத லால் துன்பத்தின் கற்பனைகளைப் பூரணமாகக் கற்று முடித்த பொழுது அஞ்ஞானம் நீங்கிவிடுகிறது ; அதன் இடத்தில் ஞானம் வந்து அமருகிறது. ஆனால், கீழ்ப்படிதலில்லாத ஒரு குழந்தை தனது பள்ளிக்கூ டத்துப் பாடங்களைப் படியாது, எப்பொழுதும் மடமையில் இருந்துகொண்டு மேன்மேலும் சிட் சை அடைந்து கொண்டிருத்தல் போல மனிதரிற்

8