இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
நீங்கள் உங்களை உண்மையோடு ஆராய்ந்து பார்த்து, துன்பமானது கழிந்து போகும் ஒரு நிலைமை என்றும், அது உங்களால் உண்டு பண்ணப்பட்டது என்றும்,உங்களுடைய சகலகேடுகளும், துன்பங்களும், துக்கங்களும், சிறிதும் பிழையாத ஒரு சட்டப்படி உங்கள் பால் வந்திருக்கின்றன என்றும், அவற்றை நீங்கள் விரும்புவதாலும் அவற்றை அடைவதற்கு நீங்கள் அருகர்களானதாலும் அவை உங்களைச் சார்ந்திருக்கின்றன என்றும், அவற்றை முன்னர் அனுபவித்துப் பின்னர் அறிவதால் நீங்கள் மிக்க பலமும், ஞானமும், மேம்பாடும், அடைவீர்கள் என்று நீங்கள் அபரோட்சமாக அறியுங்கள். அவ்வபரோட்ச ஞானத்தை நீங்கள் பூர்த்தியாக அடைந்த பொழுது நீங்கள் உங்கள் நிலைமைகளைத் திருத்திக்கொள்ளவும், சகல துன்பங்களையும் இன்பங்களாக மாற்றிக்கொள்ளவும், உங்கள் ஊழை விலக்கிக் கொள்ளவும் வல்லவர்களாவீர்கள்.