பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
துன்பத்தின் கற்பனை


நேரிசை வெண்பா

நீளிரவில் துன்புற்று நெஞ்சுடையும் காவலனே!
வாளொளியைப் பார் அந்த மாமலைமேல்;- நாளின்
ஒளிக்கொளியா நிற்கின்ற ஓர்மெய்யின் தூதன்
களிப்பொடுவைத் தான்மலைமேல் கால்.

வாள் - பிரகாசமுள்ள

இரவிலெழும் பேயோ டிருட்குழுவை யோட்டும்
இரவிவரு கின்றான்காண் இஃதோ; இரவிருளை
ஒட்டும் அவன்கிரணம் உன்முன்பார்; துன்பமெலாம்
ஓட்டும் அவன்ஒலிகேள் உற்று.

குழுவை - கூட்டத்தை.

ஒளியை விரும்புகின்ற உத்தமனே!காலை
அளியனிதோ வந்துவிட்டான்; அந்த - நளிமலையின்
உச்சியிற்பொன் பூசிவிட்டான், ஓட்டிடற்கு நீளிரவை
நச்சியொளிர் தாள்வைத்தான் நன்கு.

காலைஅளியன் - சூரியன்.

நீண்டஇருள் இன்னினியே நீங்கிவிடும்; நீளிரவும்
மாண்டஒளி வேண்டாது மாஇருளை வேண்டும்
பொருளனைத்தும் இன்னினியேபொன்றிவிடும்;இன்பம்
மருவுமென்கின் றான்தூதன்வந்து.

மாண்ட - மாட்சிமைப்பட்ட.
11