லது அழிக்கிறீர்கள். நினைப்பால் உங்கள் அகத்துள் நீங்கள் அமைக்கிற வாழ்க்கையையும் நிலைமைகளையும் போலவே உங்கள் புறவாழ்க்கையும்: நிலைமைகளும் அமைகின்றன. உங்கள் அகத்தின் ஆழ்ந்த அறைகளில் எதனைப் பொதிந்து வைத்திருக்கின்றீர்களோ அது சிறிதும் தவறாத ஒரு நியதிப்படி உங்கள் புறவாழ்க்கையின் நிலைமையாக வந்து உங்களைப் பொருந்தும். அசுத்தமும், கீழ்மையும், சுயநயமுமுள்ள ஆன்மா கேட்டையும் துன்பத்தையும் நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது ; சுத்தமும், மேன்மையும், பரநயமுமுள்ள ஆன்மா ஆக்கத்தையும், இன்பத்தையும் நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு ஆன்மாவும் தனக்குச் சொந்தமானவற்றைக் கவர்கின்றது ; அதற்குச் சொந்தமல்லாத எஃதும் அதனை அணுகாது. இதனை அபரோக்ஷமாக அறிதல் தெய்வநீதியின் சர்வ வியாபகத் தன்மையை அறிதலாம். ஆக்கத்தையும் கேட்டையும் உண்டுபண்ணுகிற ஒவ்வொரு மனித வாழ்க்கையின் சம்பவங்களும் அவனவனது அக நினைப்பின் சக்தியாலும் தன்மையாலும் அவனவனைச் சார்கின்றன. கைக்கொள்ளப்பட்ட நினைப்புக்களும் அநுபவங்களும் சேர்ந்த சேர்க்கையே ஜீவன் ; அதன் விளக்கத்திற்காக அதனாற் செய்து கொள்ளப்பட்ட கருவியே உடம்பு. ஆதலால், உங்களுடைய நினைப்புக்கள் எவையோ அவையே நீங்கள் ; உங் களைச் சுற்றியுள்ள சரவுலகமும் அசரவுலகமும்
பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/21
Appearance