உங்களுடைய நினைப்புக்களுக்குத் தக்க உருக்களைக் கொள்கின்றன. புத்தர் "நமது நிலைமைகளெல்லாம் நமது நினைப்புக்களின் பலன்கள் ; அவைகளெல்லாம் நமது நினைப்புக்களை யே ஆதாரமாகக் கொண்டுள்ளன; அவைகளெல்லாம் நமது நினைப்புக்களாலேயே செய்யப்பட்டுள்ளன.” என்று கூறியிருக் கிறார். ஆதலால், ஒருவன் சந்தோஷகரமான நினைப்புக்களில் வசிக்கின்றமையால் சந்தோஷமுள்ள வனாயிருக்கிறான் ; மற்றொருவன் விசனகரமான நினைப்புக்களில் வசிக்கின்றமையால் விசனமுள்ளவனா யிருக்கிறான். ஒருவன் அச்சமுள்ளவனாகவோ அல்லது துணிவுள்ளவனாகவோ, மடையனாகவோ அல்லது அறிஞனாகவோ, கலக்கமுற்றவனாகவோ அல்லது அமைதியுற்றவனாகவோ இருந்தால், அவனுடைய அந்நிலைமைக்குரிய காரணம் அவன் அகத்துள்ளே யே இருக்கின்றது ; புறத்தில் இல்லவே இல்லை. ஆனால், சிலர் "புற நிலைமைகள் நமது மனங்களைப் பாதிப்பதே யில்லை யென்று நீர் சொல்லுகிறீரா?" என்று வினவக்கூடும். நான் அப்படிச் சொல்லவில்லை' நான் 'எவ்வளவு தூரம் உங்களைப் புறநிலைமைகள் பாதிக்கும்படி இடங்கொடுக்கிறீர்களோ அவ்வளவு தூரமே அவை உங்களைப் பாதிக்கக்கூடும்'. என்று சொல்லுகிறேன். இஃது - ஒரு போதும் மாறாத உண்மையென்று அறியுங்கள். நினைப்பின் தன்மை யையும் பிரயோஜனத்தையும் வலிமையையும் நீங்கள் சரியாக அறிந்து கொள்ளாததனாலேயே புற
பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/22
Appearance