பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
உலகம் மனத்தின் பிரதிபிம்பம்

இல்லையென்பதும், அவற்றைக் கொள்ளுகிற மனிதனது மனத்திலேயே உள்ளனவென்பதும் தெளிவாக விளங்கவில்லையா? , இதனை நீங்கள் அபரோட்சமாக அறியத் தொடங்கும் காலையில் நீங்கள் உங்கள் நினைப்புக்களை ஆளுதற்கும், உங்கள் மனத்தைத் திருத்தி ஒழுங்குசெய்தற்கும். உங்கள் ஆன்மாவின் அகக்கோயிலைத் திரும்பக் கட்டுதற்கும் தொடங்குவீர்கள். அப்பொழுது நீங்கள் பிரயோசனமற்ற நினைப்புக்களையும் அவசியமற்ற நினைப்புக் களையும் உங்கள் அகத்தினின்றும் வெளிப்படுத்தி, சந்தோஷமும் சாந்தமும், உறுதியும் உரமும், இரக்கமும் அன்பும், அழகும். நித்தியத்துவமும் பொருந்திய நினைப்புக்களை உங்கள் அகத்துள் கொள்ளு வீர்கள். இவ்வாறு நீங்கள் செய்யுங் காலையில் நீங்கள் சந்தோஷமும் சாந்தமும் உள்ளவர்களாகவும், வலிமையும் ஆரோக்கியமும் உள்ளவர்களாகவும், இரக்கமும் அன்பும் உள்ளவர்களாகவும், நித்திய அழகும் நித்திய வாழ்வும் உள்ளவர்களாகவும் இருப்பீர்கள்.

நமது வாழ்க்கையில் நேரும் சம்பவங்களில் - இவை யிவை சுககரமானவை இவை யிவை துக்க கரமானவை என்று நாம் நினைக்கிறது போல, நம்மைச் சூழ்ந்துள்ள பொருள்களிலும் இவை யிவை சுககர மானவை இவை யிவை துக்ககரமானவை என்று தாம் நினைக்கிறோம்; அதனால், ஒருவன் ஒற்றுமை யையும் அழகையும் பார்க்கிற இடத்தில் மற்றொ ருவன் ஒற்றுமையின்மையையும் அழகின்மையை

17