பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
உலகம் மனத்தின் பிரதிபிம்பம்.

வழிப்போக்கனது காலில் மிதிபடுகிற காட்டுப்பூ, ஒரு புலவனது ஞானக்கண்ணிற்கு (பொறிகளால் காணமுடியா)க் கடவுளினது தூதன் போலத் தோன்றுகிறது. அநேகருக்குச் சமுத்திரமானது கப்பல்கள் சென்று உடைவதற் கேதுவாகிய ஒரு பயங்கரமான நீர்ப்பரப்பாகத் தோன்றுகிறது ; ஒரு சங்கீத வித்வான் அதனை ஓர் உயிருள்ள பொருளா கக் காண்கிறான்; அதனுடைய சகல மாறுதல்களிலும் அவன் தெய்வ கீதங்களைக் கேட்கிறான். ஒரு சாதா ரண மனிதன் இவ்வுலகத்தின்கண் ஆபத்துக்களையும் குழப்பங்களையும் பார்க்கிறான் ; ஒரு தத்துவஞானி இவ்வுலகத்தின்கண் காரணகாரிய ஒழுங்கைப் பார்க்கிறான். ஒரு நாஸ்திகன் இவ்வுலகத்தில் நித்திய மரணத்தையே காண்கிறான் ; ஓர் ஆஸ்திகன் இவ் வுலகத்தில் நித்திய வாழ்வையே காண்கிறான்.

இவ்வுலக சம்பவங்களுக்கும் பொருள்களுக்கும் நாம் நமது நினைப்புக்களாகிய வஸ்திரங்களை உடுத்து வது போல, நாம் நம்மைச் சுற்றியுள்ள மற்றைய மனிதர்களுக்கும் நமது நினைப்புக்களாகிய வஸ்திரங் களை உடுத்துகிறோம். சந்தேக நடத்தையுள்ளவன் ஒவ்வொரு மனிதனையும் சந்தேக நடத்தையுள்ளவ னாக நினைக்கிறான் ; பொய்யன் எல்லா மனிதரையும் பொய்யரென்று நினைக்கிறான் ; பொறாமையுள்ளவன் ஒவ்வொருவனிடத்திலும் பொறாமையைப் பார்க்கிறான் ; உலோபி தனது பொருளைக் கவருவதற்கு ஒவ்வொரு மனிதனும் ஆசைகொண்டிருக்கிறதாக

19