பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
வலிமைக்கு மார்க்கம்.

நினைக்கிறான் ; தனது மனச்சாக்ஷிக்கு விரோதமான காரியங்களைச் செய்து பணம் சம்பாதிக்கிறவன் உலகத்தி லுள்ளவர்களெல்லாம் மனச்சாக்க்ஷக்கு விரோதமான காரியங்களைச் செய்வதாகவும், தனது பொருளை அவர் திருடுவதற்காக அவாக் கொண்டி ருப்பதாகவும் எண்ணித் தனது தலையணையின் கீழ் கைத்துப்பாக்கியை வைத்துக்கொண்டு உறங்கு கிறான் ; பெருங் காமுகன் சாதுக்களை வெறும் வேஷதாரிகளென்று நினைக்கிறான். இதற்கு மாறாக, அன்புள்ள நினைப்புக்களில் வசிக்கின்றவர் எல்லா மனிதரையும் அன்புடையவராக நினைத்து, அவரிடத்து அன்பும் அநுதாபமும் பாராட்டுகின்றனர்; யோக்கியதையும் நம்பிக்கையுமுள்ளவர் எவரிடத்தும் சந்தேகம் கொள்வதில்லை ; பிறருடைய பெருஞ் செல்வத்தைக் கண்டு சந்தோஷப்படுகிற நற் சுபாவமும் தயாளமுமுடையவர் பொறாமை எப்படி யிருக்கு மென்றும் அறியார்; தமது அகத்துள் மெய்ப்பொருளை அபரோட்சமாகக் காண்கின்றவர், விலங்குகளுள்பட சகல உயிர்களிடத்தும் மெய்ப்பொருளைக் காண்கின்றனர்.

புருஷரும் ஸ்திரீகளும் தமது மனத்தில் கொண்டுள்ள நினைப்புக்களுக்கு ஒத்தவாறு காரியங்கள் நிகழக் காண்கின்றனர்; ஏனெனில், அவர் தமது மனத்திலிருந்து எவற்றைப் புறத்தே அனுப்புகின்ற னரோ, அவற்றையே காரணகாரிய நியதிப்படி புறத் திலிருந்து கவருகின்றனர்; ஆதலால், அவர் தம்மை

20