பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
விரும்பாத நிலைமைகளை விலக்கும் வழி.

என்னும் உண்மை ஒருபோதும் அழியாதது ; அதனை ஒருவரும் மறுக்க முடியாது ; அதனை ஒருவரும் ஏமாற்ற முடியாது ; அதிலிருந்து ஒருவரும் தப்ப முடியாது. எவன் நெருப்பில் கையை இடுகிறானோ, அவன் அதன் சுடுகையை அநுபவித்தே தீரவேண்டும்; நிந்தனையாவது பிரார்த்தனையாவது அச்சுடுகையை மாற்றமாட்டாது. இதே நியதிதான் மனோவுலகத் தையும் ஆள்கின்றது. வெறுப்பு, வெகுளி, பொறாமை, காமம், பேராசை இவையெல்லாம் எரிகின்ற நெருப்புக்கள் ; இவற்றை யார் தொட்டாலும் எரிதற்றுன் பங்களை அநுபவித்தே தீரவேண்டும். இம்மனோ நிலைமைகளை யெல்லாம் 'தீமை' என்று பெரியோர் சொல்லியது சரி; ஏனெனில், இவையாவும் ஆன்மா தனது அஞ்ஞான நிலையில் காரணகாரிய நியதியைக் கவிழ்ப்பதற்காகச் செய்யும் பிரயத்தனங்கள். ஆதலால், இவை ஒழுங்கின்மையையும் குழப்பத்தையும் உண்டுபண்ணி' விரைவில் அல்லது தாழ்ப்பில், நோய், தவறு, கேடு, துன்பம், விசனம், ஏக்கம் என்னும் புறநிலைமைகளின் உருக்களை அடைகின்றன. அன்பும், பொறுமையும், நல்லெண்ணமும், தூய்மையும் தம்மைப் பரிபாலிக்கிற ஆன்மாவின் மீது சாந்தியை வீசுகிற குளிர்ந்த வா யுக்கள். அவை நித்திய நியதிக்கு ஒத்தனவா யிருக்கின்றமையால், ஆரோக்கியம், ஆக்கம், வெற்றி, சாந்தம் என்னும் புறநிலைமைகளின் உருக்களை அடைகின்றன.

25