பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
விரும்பாத நிலைமைகளை விலக்கும் வழி.

யிருக்கின்றது ; நாளுக்கு நாள் அதிகமாகிற இருள் உங்களை மூடுகின்றது. நீங்கள் உங்கள் நிலைமையைக் குறை கூறுகின்றீர்கள் ; உங்கள் வறுமையை நிந்திக் கின்றீர்கள் ; உங்கள் பிறப்பையோ, பெற்றோரையோ, எஜமானையோ, உங்களுக்கு வறுமையையும் கஷ்டத்தையும் மற்றவருக்குச் செல்வத்தையும் சுகத்தையும் கொடுத்த அநியாயமான தெய்வத்தையோ பழிக்கின்றீர்கள். நீங்கள் பழிப்பதையும் கூப்பாடுபோடுவதையும் நிறுத்துங்கள்; நீங்கள் பழிக்கிற எதுவும் உங்கள் வறுமைக்குக் காரணமன்று ; காரணம் உங்கள் அகத் துள் இருக்கிறது ; அதன் பரிகாரமும் அங்கேயே இருக்கின்றது, நீங்கள் குறை கூறுபவர்களா யிருத்தலே நீங்கள் உங்கள் நிலைமையை அடைவதற்குத் தக்கவர்கள் என்பதைக் காட்டுகின்றது ; எல்லா முயற்சிகளுக்கும் அபிவிர்த்திகளுக்கும் ஆதாரமான நம்பிக்கை உங்களிடத்தில் இல்லை யென்பதைக் காட்டுகின்றது. நியாயமான பிரபஞ்சத்தில் குறைகூறுபவனுக்கு இடமே யில்லை ; கவலை ஆன்மாவைக் கொலைசெய்யத் தக்கது. உங்களுடைய ஒவ்வொரு மனப்போக்கினாலும் நீங் கள் உங்களைப் பந்தப்படுத்தியிருக்கிற விலங்கு களைப் பலப்படுத்துகின்றீர்கள் ; உங்களை மூடியிருக் கிற இருளை அதிகப்படுத்துகின்றீர்கள். உங்கள் அக நிலைமையை மாற்றுங்கள் ; உங்கள் புறநிலைமை மாறுத லடையும். உங்கள் நம்பிக்கையையும் அறி வையும் வளர்த்து நீங்கள் நல்ல நிலைமைகளையும் விரிந்த செல்வாக்கையும் அடைவதற்குத் தகுதியுள்ளவர்க

29