பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
வலிமைக்கு மார்க்கம்.

ளாகுங்கள். உங்களிடத்தில் இப்பொழுது உள்ள னவற்றை நீங்கள் முற்றிலும் சரியாக உபயோகிக் கிறீர்களா என்பதை முதலில் கவனியுங்கள். சிறிய வசதிகளைக் கவனியாது விட்டுவிட்டுப் பெரிய வசதி களை அடையலாமென்று நினைத்து நீங்கள் மோசம் போய்விடாதீர்கள். நீங்கள் அவ்வாறு பெரிய வச திகளை அடைவீர்களாயின், அவை நிலையற்றனவாகி, நீங்கள் கவனியாது விட்ட சிறிய வசதிகளின் பாடங்களைப் படிப்பதற்காக நீங்கள் திரும்பவும் கீழே வந்து சேர்வீர்கள். கலாசாலை மாணவன் ஒரு வகுப்பிலிருந்து மற்றொரு வகுப்பிற்குப் போவதற்கு முன் முந்திய வகுப்புப் பாடங்களைச் சரியாகப் படித்து முடிக்க வேண்டுவது போல, நீங்கள் விரும்புகிற பெரிய வசதிகளை நீங்கள் அடைவதற்கு முன், நீங்கள் அடைந்துள்ள சிறிய வசதிகளை நீங்கள் சரியாக உபயோகிக்க வேண்டும். நம்மிடத்திலுள்ள சிறியனவற்றை நாம் சரியான வழியில் உபயோகிக்காது பிசகான வழிகளில் உபயோகிப் போமானால், நம்மிடத்திலுள்ள சிறியனவும் நம்மிடத்திலிருந்து கவரப்படும். ஏனெனில், நமது நடக் கையால் நம்மிடத்திலுள்ள சிறியனவற்றையும் நாம் கொண்டிருப்பதற்குத் தகுதியற்றவரென்று காட்டுகிறோம்.

ஒருகால் நீங்கள் ஒரு கிறிய குடிசையில் வசித்துக்கொண்டிருக்கலாம்; உங்கள் குடிசையைச் சுற்றி ஆரோக்கியத்தைக் கெடுக்கும் கெட்ட

30