பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
வலிமைக்கு மார்க்கம்.

வாய்விடும் ; உங்கள் வரவிற்காக நீண்ட காலம் காத் துக் கொண்டிருக்கிறதும் உங்கள் தகுதிக்கு ஒத்த துமான நல்ல வீட்டையும் வசதிகளையும் நீங்கள் சரியான காலத்தில் அடைவீர்கள்.

ஒருகால், நீங்கள் ஆலோசனை செய்வதற்கும் முயற்சி செய்வதற்கும் அதிக நேரம் வேண்டுமென்று விரும்பக்கூடும் ; நீங்கள் கஷ்டத்தோடு அதிக நேரம் வேலை செய்வதாக உணரக்கூடும். அப்படியானால், உங்களுக்கு இப்பொழுது கிடைத்துள்ள சிறிய அவகாச காலம் முழுவதையும் நீங்கள் சரியாக உபயோகிக்கிறீர்களா என்று கவனியுங்கள். உங்களுக்கு இப்பொழுது கிடைத்துள்ள சிறிய அவகாச காலத்தை நீங்கள் வீணாக்குவீர்களாயின், நீங்கள் இன்னும் அதிக அவகாசம் வேண்டுமென விரும்புவதில் யாதொரு பிரயோசனமும் இல்லை. உங்களுக்கு அதிக அவகாசம் கிடைக்குமாயின், நீங்கள் இன்னும் அதிக சோம்பலுள்ளவர்களாயும் உதாசீனமுள்ளவர்களாயும் இருப்பீர்கள். வறுமையும் அவகாச மின்மையும் நீங்கள் நினைக்கிறது போல அவ்வளவு தீயன அல்ல. அவை உங்கள் அபிவிர்த்தியைத் தடுக் குமாயின், அதற்குக் காரணம் உங்கள் பலஹீனங்களாகிய உடைகளை நீங்கள் அவற்றிற்கு உடுத்தியிருத்தலே ; அவற்றில் நீங்கள் காணும் தீமை உண்மையில் உங்கள் அகத்துள் இருக்கிறது. நீங்கள் உங்கள் மனத்தைச் சீர்திருத்தி ஒழுங்குசெய்கிற அளவில் நீங்கள் உங்கள் ஊழை ஆக்குகிறவர்கள்

32