பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

விரும்பாத நிலைமைகளை விலக்கும் வழி.

என்பதை அபரோட்சமாக அறிவீர்கள் ; நீங்கள் எவ்வளவுக் கெவ்வளவு அதிகமாக உங்களைச் சீர்திருத்தி ஒழுங்கு செய்கின்றீர்களோ அவ்வளவுக் கவ்வளவு அதிகமாக நீங்களே உங்கள் ஊழை ஆக்குகின்றவர்கள் என்பதை அபரோட்சமாக அறிவீர்கள்; அப்பொழுது நீங்கள் தீயனவென்று கருதியவற்றை யெல்லாம். நல்லனவாக மாற்றிக்கொள்ளலா மென்பதைக் காண்பீர்கள். நீங்கள் அப்பொழுது உங்கள் பொறுமையையும் நம்பிக்கையையும் தைரியத்தையும் வளர்ப்பதற்கு உங்கள் வறுமையை ஒரு கருவியாக உபயோகித்துக்கொள்வீர்கள்; உங்கள் சிறிய அவகாசத்தை நீங்கள் விரைந்து ஆலோசனை செய்தற்கும் காரியம் செய்தற்கும் ஒரு துணையாக உபயோகித்துக் கொள்வீர்கள். மிகக் கெட்ட நிலத்தில் மிக நல்ல மலர்கள் வளர்வது போல வறுமையாகிய மிகக் கெட்ட நிலத்தில் மிக நல்ல மனிதராகிய மலர்கள் வளர்ந்து மலர்ந்திருக்கின்றன. எவ்விடத்தில் நாம் கஷ்டங்களை எதிர்க்க வேண்டியதிருக்கிறதோ அவ்விடத்திலும், எவ்விடத்தில் நாம் அதிருப்தியான நிலைமைகளை வெல்ல வேண்டியதிருக்கிறதோ அவ்விடத்திலும், ஒழுக்கம் மிக மிக வளர்ந்து அதன் பெருமையைக் காட்டுகின்றது.


நீங்கள் ஒரு கொடுமையான எஜமானுக்கு அல்லது எஜமாட்டிக்கு வேலைபார்த்துக்கொண்டிருக்கலாம்; நீங்கள் கொடுமையாக நடத்தப்படுவதாக உணரலாம். இதுவும் உங்கள் அபிவிர்த்திக்கு


[3]

33