ஆவசியக மென்று கருதுங்கள். உங்கள் எஜமான் அல்லது எஜமாட்டி உங்களை அன்பில்லாது நடத் தினால், அவர்களிடத்தில் நீங்கள் அன்பையும் பொறு மையையும் காட்டுங்கள். நீங்கள் இடைவிடாது பொறுமையையும் அடக்கத்தையும் அப்பியகியுங்கள். உங்கள் மனோ பலத்தையும் ஆன்ம பலத்தையம் வளர்ப்பதற்கு உங்களுக்குப் பிரதிகூலமாகவுள்ள, நிலைமைகளை அநுகூலமாக உபயோகித்துக்கொள் ளுங்கள், உங்கள் மௌன நடத்தையாலும் சக்தி யாலும் உங்கள் எஜமான் அல்லது எஜமாட்டிக்குப் புத்தி கற்பிப்பீர்கள்; அவர் தமது நடத்தையைப் பார்த்து நாணமடையும்படி செய்வீர்கள்; அதே சமயத்தில் நீங்கள் உங்கள் ஆன்ம சக்தியை வளர்த் துக்கொண்டும், உங்கள் தற்கால நிலைமைகளைப் பார்க்கினும் உயர்ந்த நிலைமைகள் உங்களை நெருங்குங் காலத்தில் அவற்றை ஒப்புக்கொள்வதற்குத் தகுதி யுள்ளவர்களாக நீங்கள் வளர்ந்துகொண்டும் இருப்பீர்கள். நீங்கள் அடிமையாக இருப்பதாகக் குறை கூறாதீர்கள் ; நீங்கள் மேன்மையான நடத்தையால் அடிமை ஸ்தானத்திற்கு மேற்பட்டவர்களாகுங்கள், நீங்கள் வேறொருவனுக்கு அடிமையாக யிருப்பதாகக் குறைகூறுவதற்கு முன், நீங்கள், உங்களுக்கு (உங் கள் மனத்திற்கும் சரீரத்திற்கும்) அடிமையா யிருக்க வில்லையா என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள் நீங்கள் அகத்துள் நோக்குங்கள் ; அங்குத் தேடிப்
பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/42
Appearance