பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
விரும்பாத நிலைமைகளை விலக்கும் வழி

பாருங்கள்; உங்கள் மீது இரக்கம் கொள்ளாதீர்கள். நீங்கள் அடிமைத்தனமான நினைப்புகளையும் அவாக்களையும் அங்குக் காண்பீர்கள். உங்கள் தினசரி வாழ்கையிலும் நடக்கையிலும் அடிமைத்தனமான பழக்கங்களைக் காண்பீர்கள். நீங்கள் இவற்றை வெல்லுங்கள் ;நீங்கள் உங்களுக்கு அடிமையாயிருப்பதை விடுங்கள் ; அப்போது உங்களை அடிமைப்படுத்தும் சக்தி எவனிடத்திலும் இருக்கமாட்டாது. நீங்கள் உங்களை வெல்லும் காலையில், நீங்கள் பிரதிகூலமான நிலைமைகளை யெல்லாம் வென்றுவிடுவீர்கள் ; ஒவ்வொரு கஷ்டமும் உங்களைக் கண்ட மாத்திரத்தில் நீங்கிவிடும்.

செல்லவந்தர்கள் உங்களை இம்சிக்கிறதாகக் குறைகூறாதீர்கள். நீங்கள் செல்வந்தர்களானால் நீங்கள் எளியவர்களை இம்சிக்கமாட்டீர்களென்பது நிச்சயமா? முற்றிலும் நியாயமான ஒரு ரித்திய சட்டம் இருக்கிற தென்பதையும், இன்று இம்சிக்கிறவர் நாளை இம்சிக்கப்படுவா் னென்பதையும், இச்சட்டத்திலிருந்து எவனும் தப்பமுடியா தென்பதையும் நீங்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள், ஒருகால் நீங்கள் நேற்று (உங்கள் முந்திய ஜென்மம் ஒன்றில்) செல்வவந்தர்களாகவும் இம்சிக்கிறவர்களாகவும் இருந்திருக்கலாம் ; நீங்கள் அப்பெரியசட்டத்திற்குச் செல்ல வேண்டிய உங்கள் கடனை இன்று செலுத்திக்கொண்டிருக்கலாம். ஆதலால், நீங்கள் நம்பிக்கையையும் தைரியத்தையும் கைக்கொள்ளுங்

35