விரும்பாத நிலைமைகளை விலக்கும் வழி.
பணம் சம்பாதிப்பதைப் பார்த்தால் உங்கள் தெய்வ நம்பிக்கையை இழக்கமாட்டீர்கள் ; ஏனெனில், அவன் மறுபடியும் வறுமையையும் தாழ்வையும் அடைந்தே தீரவேண்டு மென்பதை நீங்கள் அறிவீர்கள். ஒழுக்கமில்லாத செல்வவந்தன் உண்மையில் தரி த்திரனே ; நதியின் ஜலம் சமுத்திரத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமே அவன் சகல செல்வங்களையும் உடையவனா யிருக்கும் பொழுதே வறுமைக்கும் கேட்டிற்கும் சென்றுகொண்டிருக்கிறான் என்பது ; அவன் செல் வவந்தனாக இறந்த போதிலும், அவனது தீய ஒழுக்கத்தின் தீய பலன்களை அறுப்பதற்கு அவன் திரும்பப் பிறந்தே தீர வேண்டும். அவன் அநேக தடவை செல்வத்தை அடைந்த போதிலும், அவன் நீண்ட கால இன்ப துன்ப அனுபவங்களால் அவனுடைய அறத்தின் வறுமையை வெல்லும் வரை, அவன் அநேக தடவை வறுமையை அடைந்தே தீரவேண்டும். ஆனால், புறத்தில் செல்வமின்றியும் அகத்தில் ஒழுக் கத்தைக் கொண்டு மிருக்கிற மனிதன் உண்மையில் செல்வவந்தனே ; அவனது சகல வறுமைகளோடும் அவன் செல்வத்திற்கும் க்ஷேமத்திற்கும் சென்று கொண்டிருக்கிறான் ; அவனது வரவிற்காக நித்திய இன்பமும் சுகமும் காத்துக்கொண்டிருக்கின்றன.
நீங்கள் உண்மையாகவும் நிலையாகவும் செல்வவந்தர்களாயிருக்க விரும்புவீர்களாயின், நீங்கள் முதலில் ஒழுக்க முடையவர்க ளாதல்வேண்டும்.