பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விரும்பாத நிலைமைகளை விலக்கும் வழி.

உங்கள் நோக்கத்தை நன்றாகச் சோதித்துப் பாருங்கள்; ஏனெனில், மற்றவர்களைச் சுகப்படுத்தும் நோக்கத்தோடு செல்வத்தை விரும்பியவர்களில் பெரும் பாலார், ஜனங்களால் நேசிக்கப்படவேண்டு மென்ற நோக்கத்தையும் பரோபகாரி அல்லது சீர்திருத்தக் காரனென்ற பெயரை அடையவேண்டு மென்ற விருப்பத்தையும் கொண்டவரா யிருந்திருக்கின்றனர். உங்களிடத்திலுள்ள சிறிய செல்வத்தைக் கொண்டு நீங்கள் நன்மை செய்யவில்லையானால், நீங்கள் அதிக செல்வத்தை அடைந்தபொழுது நீங்கள் அதிக சுயநயமுள்ளவர்களாவீர்க ளென்றும், நீங்கள் உங்கள் செல்வத்தைக் கொண்டு செய்வதுபோல் தோன்றிய நன்மைகளெல்லாம் உங்களது தற்பு கழ்ச்சி நிமித்தமே செய்யப்பட்டன வென்றும் நம்புங்கள். நன்மை செய்தல் உங்களுடைய உண்மையான விருப்பமாயிருப்பின், நீங்கள் அதனைச் செய்யச் செல்வத்திற்காகக் காத்திருக்கவேண்டிய ஆவசியக மே யில்லை; நீங்கள் அதனை இப்பொழுதே, இந்த நிமிஷத்திலேயே, நீங்கள் இருக்கிற இடத்திலிருந்தே, செய்யக்கூடும். நீங்கள் உங்களை மதிக்கிறபடி நீங்கள் உண்மையில் அவ்வளவு பரநயமுடையவர்களாயின், நீங்கள் மற்றவர்கள் நிமித்தம் இப்பொழுதே உங்கள் சொந்த சௌகரியங்களிற் சிலவற்றைக் குறைக்கலாம்; நீங்கள் எவ்வளவு எளியவர்களாயிருந்தாலும் பெரிய காரியமில்லை ; உங்கள் சுயநலத்தைப் பரித்தியாகம்

41