பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலிமைக்கு மார்க்கம். செய்வதற்கு இடமுண்டு ; ஏனெனில், அன்னவஸ் திரப்பணம் மாத்திரம் வாங்கிக் கொண்டிருக்கிற விதவைகூடத் தன் பணம் முழுவதையும் வட்டிக்குக் கொடுக்கிறாள். நன்மை செய்வதற்கு உண்மையில் விரும்புகின்ற ஹிருதயம் செல்வம்வரும்வரையில் காத் திருக்கமாட்டாது ; அது பரித்தியாகம் என்னும் பலி பீடத்தின் முன் வந்து, யான்” என்னும் தகுதி யற்ற அபிமானத்தை அவ்விடத்தில் விட்டுவிட்டு, அயலானுக்கும் அந்நியனுக்கும் சிநேகனுக்கும் பகை வனுக்கும் ஒரே தன்மையாக உபகாரம் செய்யச் செல் கின்றது. காரியம் காரணத்தோடு சம்பந்தப்பட்டிருப்பது போல, செல்வமும் பலமும் அகான்மையோடும், வறுமையும் பலஹீனமும் அகத்தீமையோடும், சம் பந்தப்பட்டிருக்கின்றன. பணம் உண்மையான செல் வமுமன்று, அந்தஸ்துமன்று, பலமுடன்று; பணத் தை மாத்திரம் நம்பியிருத்தல் ஒரு வழுக்கிடத்தில் நிற்றலை யொக்கும். உங்கள் உண்மையான செல்வம் உங்கள் ஒழுக்கமே; உங்கள் உண்மையான பலம் உங்கள் ஒழுக்கத்தைப் பலன் தரும் வழிகளில் உட யோகித்தலே. நீங்கள் உங்கள் அகத்தைச் சீர்ப் படுத்துவீர்களாயின், உங்கள் வாழ்க்கையைச் சீர்ப் படுத்துவோராவீர்கள். காமம், வெறுப்பு, வெகுளி, வீண் பெருமை, தற்பெருமை, பேராசை, பொறி யின்பம், சுயநயம், மூர்க்கத்தனம், இவை யெல்லாம் வறுமையும் பலஹீனமுமாகும் ; அன்பு, தூய்மை , 42