பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

விரும்பாத நிலைமைகளை விலக்கும் வழி. அமைதி, பணிவு, பொறுமை, இரக்கம், தயாளம், சுயநயம் மறத்தல் சுயநயந்துறத்தல் - இவை யெல் லாம் செல்வமும் பலமுமாகும். வறுமையின் தத்து வங்களையும் பலஹீனத்தின் தத்துவங்களையும் வென் றபொழுது, எஃதாலும் வெல்லப்பட முடியாததும் எல்லாவற்றையும் வெல்வதுமான ஒரு சக்தி அகத் தினின்று வெளிப்படுகின்றது. மிக உயர்ந்த ஒழுக் கத்தைக் கைக்கொண்டிருக்கின்றவன் உலகம் முழு வதும் தன்முன் கீழ்ப்படியச் செய்கின்றான். ஆனால், செல்வவந்தர்களும் தரித்திரர்களும் தாங்கள் விரும்பாத நிலைமைகளைக் கொண்டிருக் கிறார்கள் ; தரித்திரர்களுக்குள்ள சுகம் பெரும்பா லும் செல்வவந்தர்களுக்கில்லை ; இதனால், சுகமானது புறப்பொருள்களையாவது புறவுடைமைகளையாவது பொறுத்த தன்றென்றும், ஆனால் அகநிலைமையைப் பொறுத்த தென்றும் அறிகிறோம். ஒருகால், நீங்கள் வேலைக்காரர்களை வைத்து வேலைவாங்கும் எஜமான் களாயிருக்கலாம்; உங்கள் வேலைக்காரர்களால் நீங் கள் ஓயாத தொந்தரவுகளை அடைந்துகொண்டிருக் கலாம்; உங்களுக்கு நம்பிக்கையுள்ள நல்ல வேலைக் காரர்கள் கிடைத்தால் அவர்கள் உங்களை விட்டு விரைவில் நீங்கிவிடுகிறார்கள். இதனால் நீங்கள் மனித சுபாவத்தைப்பற்றிய உங்கள் நம்பிக்கையை இழக்க ஆரம்பிக்கிறீர்கள், அல்லது முற்றிலும் இழந்து விடுகிறீர்கள். நீங்கள் உங்கள் வேலைக்காரர்களுக்கு அதிக சம்பளங்கள் கொடுத்தும் அதிக சுதந்தரங்கள் 43