பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வலிமைக்கு மார்க்கம்.

கொடுத்தும் உங்கள் காரியங்களைச் சீர்ப்படுத்த முயல்கின்றீர்கள்; ஆனால், உங்கள் காரியங்கள் முன் போலவே யிருக்கின்றன, நான் உங்களுக்கு ஒன்று! சொல்லுகிறேன். உங்கள் தொந்தரவுகளின் மர்மம். உங்கள் வேலைக்காரர்களிடத்தில் இல்லை ; அஃது உங்களிடத்திலேயே இருக்கின்றது ; நீங்கள் உங்கள் குற்றதைக் கண்டு நீக்கவேண்டு மென்ற உண்மை யான அவாவுடன் உங்கள் அகத்துள் நோக்கு வீர்களாயின், நீங்கள், விரைவிலோ தாழ்ப்பிலோ, உங்கள் சகல அசந்தோஷங்களுக்கு முரிய மூலத்தை அங்குக் காண்பீர்கள். அஃது ஒரு சுயநய அவா வாக, . அல்லது பிறர்மீது சந்தேகம் கொள்கின்ற அல்லது அன்பில்லாதிருக்கின்ற ஒரு மனப் போக்கா யிருக்கலாம் ; அதனை நீங்கள் உங்கள் பேச்சிலும் நடத்தையிலும் காட்டாவிட்டாலும், அது தனது விஷக்காற்றை உங்களைச் சுற்றி யுள்ளவர்கள் மீது வீசித் திரும்ப உங்களிடம் வந்து உங்களைப் பாதிக் கின்றது. நீங்கள் உங்கள் வேலைக்காரர்களிடத்தில் அன்புடையவர்களாயிருங்கள் ; நீங்கள் அவர்களு டைய சந்தோஷத்தையும் சௌகரியத்தையும் கவனி யுங்கள் ; நீங்கள் ஒருவருக்கு வேலைக்காராயிருந் தால் நீங்கள் செய்ய விரும்பாத அளவுக்கு மிஞ்சிய வேலைபை உங்கள் வேலைக்கார்கள் செய்ய வேண்டு மென்று விரும்பாதீர்கள். தனது எஜமானுடைய நன் மையின் நிமித்தம் தன்னை முற்றிலும் மறந்துவிடுகிற ஒரு வேலைக்காரனது ஆன்ம அடக்கத்தைக் காண் பது அருமையாயும் அழகாயு மிருக்கின்றது ; ஆனால்,