பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

விரும்பாத நிலைமைகளை விலக்கும். வழி. தனது சுகத்தை மறந்து தனக்குக் கீழ்ப்பட்ட' வேலைக்காரர்களது சுகத்தை நாடுகிற ஒரு எஜமானு டைய ஆன்மஉயர்ச்சியைக் காண்பது அதனினும் அருமையாயும், திவ்வியமாயும் இருக்கின்றது. அத்தகைய மனிதனது சுகம் ஒன்றற்குப் பத்து மடங்காகப் பெருகுகின்றது ; தனது வேலைக்காரர்களைப் பற்றிக் குறைகூறும் ஆவசியகம் அவனுக்கு ஏற்படுவதில்லை. எண்ணிறந்த வேலைக் காரர்களை வைத்து வேலைவாங்கு கிறவரும், ஒரு போதும் ஒரு வேலைக்காரனையும் தம் வேலையினின்று நீக்காதவருமான ஒரு பெயர்பெற்ற மனிதர் "நான் எனது வேலையாட்களுடன் எப்பொழுதும் மிகச் சந்தோஷகரமான சம்பந்தங்களை யுடையவனா யிருக்கின்றேன். அதற்குக் காரணம் என்னவென்று நீங்கள் என்னைக் கேட்பீர்களாயின், எப்படி அவர்கள் என்னிடத்தில் நடக்க வேண்டுமென்று நான் விரும் புகிறேனோ அப்படியே நான் அவர்களிடத்தில் நடக்க வேண்டு மென்ற நோக்கத்தை நான் ஆரம்பம் முதல் கொண்டிருக்கிறேனென்று மாத்திரம் சொல் வேன்." என்று கூறினார். விரும்பத்தகாத சகல நிலைமைகளையும் நீக்குவதற்கும், விரும்பத்தக்க சகல நிலைமைகளையும் அடைவதற்கும் உரிய மர்மம் இதில் அடங்கியிருக்கிறது. உங்களுக்கு உலகத்தில் சிநே கிதர் ஒருவருமில்லை யென்றும், உங்களை ஒருவரும் நேசிக்கிறதில்லை யென்றும், நீங்கள் தனிமையா யிருக்கிறதாகவும் நீங்கள் கூறுகின்றீர்களா? அப்படி யானால், உங்கள் சொந்த நன்மைக்காக, உங்களைத் 45