பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வலிமைக்கு மார்க்கம், தவிர வேறு ஒருவரையும் குறைகூறாதீர்களென்று உங்களைப் பிரார்த்திக்கிறேன் ; நீங்கள் மற்றவர் களிடத்தில் சிநேகம் பாராட்டுங்கள்; சிநேகிதர்கள் உங்களைச் சுற்றி மொய்த்துக்கொண்டிருப்பார்கள். நீங்கள் உங்களைத் தூயர்களாகவும் நேசிக்கப்படத் தக்கவர்களாகவும் செய்யுங்கள் ; எல்லாரும் உங்களை நேசிப்பார்கள். தன்னைத் தூய்மையாக்குதலும் தன்னையடக் கியாள் தலுமாகிய சிருஷ்டிசக்தியை உங்கள் அகத்துள் வளர்ப்பீர்களாயின், உங்கள் உயிருக்குப் பாரமாயிருக்கிற சகல நிலைமைகளினின்றும் நீங்கள் நீங்கிவிடுவீர்கள். உங்களுக்குத் துன்பத்தைக் கொ டுக்கிற வறுமை (நான் சொல்லுகிற வறுமை துன்பத் திற்கு மூலமாயிருக்கிற வறுமையே யன்றி முத்தரும். தவத்தரும் மனதார வேண்டுமென்று உண்டு பண்ணிக்கொள்ளுகிற வறுமையன்று) யாக இருந் தாலுஞ்சரி, அல்லது உங்களுக்குப் பாரமாகத் தோன்றுகிற செல்வமாக இருந்தாலுஞ்சரி, அல்லது உங்கள் வாழ்க்கையில் நேரும் கேடுகளும் துன்பங் களும் துக்கங்களுமாக இருந்தாலுஞ்சரி, அவற்றை யெல்லாம், அவற்றிற்கு ஆஸ்பகமாயிருக்கிற உங்கள் 'அகத்திலுள்ள சுயநய தத்துவங்களை ஒழிப்பதனால் நீங்கள் ஒழித்து விடலாம், சென்றகால நினைப்புக்களும் செயல்களும் பிழை யாத நியதிப்படி தமது பலன்களைக் கொடுக்கவேண்டி. யவைகளாயும் அவற்றை நாம் அநுபவிக்கவேண்டி